தலையை வடக்கு திசை நோக்கி வைத்து தூங்கலாமா? அறிவியலும் பாரம்பரியமும்!
வடக்கு திசையில் தலை வைத்து தூங்காதீர்கள் என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த வலைப்பதிவில் தூங்கும் திசையைப் பற்றி பாரம்பரிய அறிவும், அறிவியலும் என்ன சொல்கின்றன என்பதைப் பகிர்ந்துக்கொள்கிறேன்!
நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் பொழுது உடல் ஓய்வெடுத்திருந்தாலும், மூளை மாரத்தான் ஓடியது போல் உணர்ந்திருக்கிறீர்களா? 8 மணி நேரம் தூங்கிய பிறகும் மேலும் களைப்பாக எழுந்திருக்கிறீர்களா? இதற்கு காரணம் நீங்கள் தூங்கும் திசையாக கூட இருக்கலாம். ஒரு முறையாவது, உங்கள் தலையை வடக்கு திசையில் வைத்துத்தான் தூங்கினீர்களா என்பதைச் சரிபார்க்கவும்!
இந்தியா போன்ற நாடுகளில் இது புதுமையல்ல, இது நம்முடைய பாரம்பரிய அறிவு. நம்மில் பெரும்பாலோரும் ஒரு கட்டத்தில் மூதாதையர் சொல்வதைக் கேட்டிருப்போம்: “தலையை வடக்கு திசையில் வைத்து தூங்கக்கூடாது”. ஆம், தூங்கும் திசைக்கு முக்கியத்துவம் உண்டு. இந்திய பாரம்பரியங்களில் தலையை வடக்கு நோக்கி வைத்து தூங்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு கலாசார நம்பிக்கைகளும், அறிவியல் காரணங்களும் இருக்கின்றன. முதலில், நம்முடைய பாரம்பரியமும், ஆயுர்வேத நம்பிக்கைகளும் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.
இந்திய பாரம்பரிய தத்துவங்களில், குறிப்பாக வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேதத்தில், மனித உடல் ஒரு காந்தக் கருவியாகக் கருதப்படுகிறது. இதில் தலை வடக்குத் துருவமாகவும், பாதங்கள் தெற்குத் துருவமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பூமிக்கும் காந்தத் தன்மை உள்ளது, அதன் வடதிசை மேல் திசையாக உள்ளது. இதனால், தலையை வடக்கு திசையில் வைத்து தூங்கும்போது, வட-வட துருவங்கள் எதிரொட்டுவதால் தள்ளப்படுதல் ஏற்படுகிறது.
வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது:
- ரத்த ஓட்டத்தைச் சீர்கேடாக்கும்
- மனக் குழப்பம், பதற்றம் அல்லது கெட்ட கனவுகளை ஏற்படுத்தும்
- மனஅழுத்தம் அல்லது தலைவலியை உருவாக்கும்
- நீண்ட கால சுகாதாரத்திற்கும், மனநிலைக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாம்
- உங்களின் உயிர் சக்தி (பிராணா) பாதிக்கப்படும்
சிறந்த திசை: தெற்கு.
தலையை தெற்கே வைத்து தூங்குவது, பூமியின் காந்தப் பாய்ச்சலோடு உடலை ஒழுங்குபடுத்துவதாக நம்பப்படுகிறது. இது அமைதியான தூக்கத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் என்று கூறப்படுகிறது.
இப்போது உங்கள் மனதில் வரக்கூடிய கேள்வி – இதை நம்ப வேண்டிய அவசியம் உள்ளதா?
கவலை வேண்டாம், இது பெரியவர்கள் சொன்னது மட்டும் அல்ல – அறிவியலும் இப்போது இதைப் புரிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளது.
- பூமியில் ஜியோமேக்னெட்டிக் (geomagnetic) புலம் உள்ளது. நம் இரத்தத்தில் இரும்புச் சத்து உள்ளதால், அது நமக்குள் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
- சில ஆய்வுகள் தலை தெற்கே வைத்து தூங்கும் போது, இரத்த அழுத்தம் மற்றும், இதயத் துடிப்பு சீராக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.
- பூமியின் காந்தப்புலம், நம் இரத்த ஓட்டம், இதயத்தின் திசை— இவை மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாகவும் உடல் நிலை மாற்றத்தில் முக்கிய பங்கும் வகிக்கின்றன
- தலை வடக்கு நோக்கி தூங்கும்போது, ரத்த ஓட்டத்தில் சிறிய இடையூறு ஏற்படலாம்.
தலை தெற்கே வைத்தால், இயற்கையின் காந்தப் பாய்ச்சலோடு சீராக அமைந்து, ஆழமான தூக்கத்திற்கு உதவியாக இருக்கலாம்.
எனவே, இது கடுமையான இயற்பியலாக இல்லையென்றாலும், தெற்கு திசைத் தூக்கத்தால் கிடைக்கும் அமைதியான அனுபவம் வெறும் மூடநம்பிக்கையாக மட்டும் கருதப்பட முடியாது.
உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் கேட்டால், “உங்கள் தலையை வடக்கு திசை நோக்கி வைத்து உறங்கினால், உங்கள் மூளை சாம்பார் போல கொதிக்கும்” என்று சொல்வார்கள். வடக்கு திசை நோக்கி தலை வைத்து உறங்கக்கூடாது என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்போது, நீங்கள் ஏன் இதை எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கட்டிலையே வடக்கு-தெற்கு திசையில் போட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். எனவே இவ்வளவு காலமும் நான் மிகவும் பயன்தரக்கூடிய தெற்கு திசையை தவிர்த்து மேற்கு திசையில் தலை வைத்து தூங்கி வந்தேன். எனவே, பிறரும் இதுபோன்று சரியும் தவறுமான அறிவுரையால் பாதிக்கப் படக்கூடாது என்ற நோக்கமே இதை எழுத காரணம். இப்போது என் படுக்கையில் தலைப்பகுதி தெற்கு திசையில் உள்ளது.
இது ஒரு சிறிய மாற்றம் தான். ஆனால் அது என் உடலையும், நம்பிக்கையையும் ஒருசேர அமைதியாக உறங்க அனுமதிக்கிறது.
உறக்கத்திற்கான திசைகள்
இளைய தலைமுறைக்கு உறக்கத்தின் திசைக்காட்டியைப் புரியவைக்க நான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்:
வடக்கு திசை: உங்கள் படுக்கை வடக்கு நோக்கி இருந்தால், உங்களுக்குத் தூக்கம் கெட்டு, தலைவலி, அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் வரலாம்.
தெற்கு திசை: தெற்கு திசை சிறந்த உறக்கத்தை அளிக்கிறது. இதனால் ஆழ்ந்த உறக்கமும், அமைதியான மனமும் கிடைக்கும்.
கிழக்கு திசை: கிழக்கு திசை நல்ல தரமான உறக்கத்தை அளிப்பதாகவும், கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு திசை: மேற்கு திசை மிதமானது, கனவுகள் நிறைந்த மற்றும் சற்று அமைதியற்ற உறக்கத்தை அளிக்கும்.
பூமியின் காந்தப் புலம் மற்றும் உடல் ஒரு காந்தம் என்ற கருத்தை நீங்கள் நம்பவில்லை என்றாலும், ஒரு முறை தூங்கும் திசையை மாற்றிப் பார்த்தால் எந்த பாதிப்பும் இருக்காது. யார் அறிவார்? அந்த சிறிய மாற்றம் நல்ல தூக்கம், நல்ல மனநிலை மற்றும் இரவு 2 மணிக்கு வரக்கூடிய அலறிக்கொள்கும் கனவுகளில்லாத அமைதியான இரவை தரக்கூடும்!
நீங்கள் ஏன் உங்கள் தலையை தெற்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து உறங்கி, அடுத்த நாள் காலை சுறுசுறுப்பாக எழ உதவும் அமைதியான உறக்கத்தைப் பெறக்கூடாது?
குறிப்பு: மேலே சொன்ன அனைத்தையும் நீங்கள் வேறு விதமாக அல்லது நேரெதிராக கேள்விப்பட்டிருந்தால், பீதியடைய வேண்டாம். சில மரபுகளில் (குறிப்பாக பூகோளத்தின் தெற்கு அரைக்கோளத்தில்), வடக்கு நோக்கி தலை வைத்து உறங்குவது உண்மையில் சிறந்ததாகக் கருதப்படுகிறது! ஆனால் இந்தியா போன்ற வடக்கு அரைக்கோள நாடுகளில், வடக்கு நோக்கி தலை வைத்து உறங்குவது ஊக்கப்படுத்தப்படுவதில்லை. எனவே, இந்த கருத்து நீங்கள் பூமியில் இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்.
